பிணைக்கைதிகளுக்கு மருந்து: பிரான்ஸ், கத்தாரின் முயற்சி

ஹமாஸின் பிடியில் உள்ளவர்களுக்கான மருந்து பொருள்கள் முதன்முறையாக வெளியிலிருந்து செல்கின்றன.
ராபா எல்லையில் தாக்கப்பட்ட கட்டடங்கள் | AP
ராபா எல்லையில் தாக்கப்பட்ட கட்டடங்கள் | AP

ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளுக்கு மருந்து பொருள்களை கத்தார் மற்றும் பிரான்ஸ் நாடுகள் அனுப்பியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான போர் 100 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்துவரும் நிலையில் இரு தரப்புக்குமிடையே மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் பிரான்ஸின் ஒப்பந்தத்தின்படி காஸாவுக்கு மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மருந்து பொருள்கள் எகிப்துக்கு சென்று அங்கு செம்பிறை சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஹமாஸுக்கு கொண்டு சேர்ப்பார்கள் எனத் தெரிகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானம் | AP
இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானம் | AP

மேலும், முற்றுக்கையிடப்பட்ட காஸா பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கான மருந்து மற்றும் வாழ்வாதார உதவிகளும் அனுப்பப்படவுள்ளன.

நவம்பரில் இருதரப்புக்குமிடையே ஒரு வார கால போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேறியது.

இடிபாடுகளுக்கு மத்தியில் பாலஸ்தீனர்கள் | AP
இடிபாடுகளுக்கு மத்தியில் பாலஸ்தீனர்கள் | AP

அக்.7 ஹமாஸால் கடத்தி செல்லப்பட்டவர்களில் பகுதி கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் 100-க்கும் அதிகமான பேர் இன்னமும் ஹமாஸ் பிணையில் உள்ளனர்.

நிரந்தர போர் நிறுத்தம் அமலாகும் வரையில் கைதிகளை விடுவிப்பதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com