

ஜப்பான் அனுப்பிய விண்கலமான ஸ்லிம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவை நோக்கி ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இன்று காலை வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5-ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டா் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் ‘நிலவின் ஸ்னைப்பா் (தொலைவிலிருந்து துல்லியமாக சுடும் வீரா்)’ என்று அழைக்கப்படுகிறது.
ஏற்கெனவே மோசமான வானிலை காரணமாக ஸ்லிம் விண்கலத்தை ஏவும் பணி 3 முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.