விரைக்கும் குளிரில் தண்ணீருக்குள் மூழ்கியெழுந்த விளாதிமீர் புதின்! காரணம் என்ன?

விரைக்கும் குளிரில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தண்ணீரில் மூழ்கியெழுந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது. 
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் விரைக்கும் குளிரில் தண்ணீருக்குள் மூழ்கியெழுந்ததாக ரஷிய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார். 

ஆண்டின் துவக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியாரால் ஆசீர்வதிக்கப்பட்ட  தண்ணீரில் மூழ்கி எழுவது ஒரு மரபுவழி சடங்கு ஆகும். அந்தச் சடங்கு மூலம் தூய்மையடைவதோடு அந்தத் தண்ணீர் குணப்படுத்தும் பண்புகளை அளிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கம் எபிபானி வாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. 

இதற்கு முன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தச் சடங்கை செய்யும் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் காணொலி எதுவும் வெளியிடப்படாத நிலையில், ரஷிய அதிபர் சடங்கை இந்த ஆண்டு தவறாமல் செய்து முடித்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரஷிய அதிபர் இந்த சடங்கை செய்யும் காணொலி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com