ஈரான் - பாகிஸ்தான் விவகாரம்: எல்லைகள் திறப்பு

இரு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் சுமுகமானதைத் தொடர்ந்து அனைத்து எல்லை பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

கராச்சி: பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையிலான சரக்கு போக்குவரத்து இயல்புக்கு திரும்பியது. இரு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் சுமுகமானதைத் தொடர்ந்து அனைத்து எல்லை பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

காய்கறிகள் மற்றும் பொருள்களை ஏற்றி வந்த 100-க்கும் அதிகமான டிரக்குகள், தஃப்தான் எல்லையைக் கடந்து ஈரானுக்குள் நுழைந்ததாக ஈரானின் மக்ரான் மாகாண ஆணையர் சயீத் அஹ்மத் உம்ரானி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலும் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்து தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பலூச் பிரிவினைவாதிகளான ஜெய்ஷ் அல்-அதல் அமைப்பின் இரு நிலைகளில் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறியது.

அதற்குப் பதிலடியாக, ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத நிலைகளில் தாக்குதல் நடத்துவதாகக் கூறி பாகிஸ்தானும் வியாழக்கிழமை துல்லியத் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் வெகுவாக அதிகரித்தது. இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா்களும் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியதால் சுமுக உடன்படிக்கை எட்டப்பட்டது.

இந்த நிலையில் இரு நாடுகளின் எல்லைகளிலும் காத்து நின்ற சரக்கு, எரிபொருள் மற்றும் எரிவாயு டிரக்குகள், கண்டெயினர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com