நீதிக்கான காஸா மக்களின் கண்ணீர்... : தென்னாப்பிரிக்கா

ஐநா நீதிமன்றத்தின் உத்தரவை தென்னாப்பிரிக்கா வரவேற்றுள்ளது.
இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் | AP
இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் | AP

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஐநாவின் நீதிமன்றத்தில், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றங்கள் வெளிப்படையாக போட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபர் அந்நாட்டு மக்களிடையே பேசிய காணொலியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிக்கான பாலஸ்தீன மக்களின் கண்ணீர் பொருட்படுத்தப்பட்டதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐநா நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் | AP
ஐநா நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் | AP

காஸாவில் இனப் படுகொலையைத் தவிா்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிலர் தென்னாப்பிரிக்கா மற்ற நாட்டு விவகாரங்களில் ஏன் தலையிடுகிறது என விமர்சித்ததாகவும் எங்கெல்லாம் மக்கள் இடப்பெயர்வையும் பாகுபாட்டையும் அரசு வன்முறையையும் எதிர்கொள்கிறதோ அது எங்கள் இடம்தான் என சிரில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் இனபாகுபாட்டைச் சந்தித்த நாடு என்கிற முறையில் தங்களால் எது இனப்பாகுபாடு எனக் கண்டுகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார் சிரில் ரமபோசா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com