
பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்த நிலையில், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார்.
கட்சித் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம், பிரிட்டன் பிரதமர் பதவியை ரிஷி சுனக் இழந்தார்.
பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சித் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்வதாகவும், பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும், பிரிட்டன் நாட்டு அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார் ரிஷி சுனக்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது ராஜிநாமா குறித்து அறிவித்த ரிஷி சுனக், விரைவில் பிரிட்டன் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததற்கான கடிதத்தை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பதால், கட்சித் தலைமை பொறுப்பை சுனக் ராஜிநாமா செய்தார். இதனால், கட்சித் தலைமைக்கான போட்டி ஒன்று உருவாகியிருக்கிறது. அதனுடன், கட்சியை மீள்உருவாக்கம் செய்யும் சவாலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிஷி சுனக் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது நினைவில்கொள்ளத் தக்கது.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சா்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தற்போது தொழிலாளர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
2024 பிரிட்டன் பொதுத் தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தோல்வியடைந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக், கியெர் ஸ்டார்மருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றிபெற்றாலே போதும் என்ற நிலையில், தொழிலாளர் கட்சி 400க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.