பிரான்ஸ் தேர்தல்: இடதுசாரி கூட்டணி வெற்றி!

வலதுசாரி கூட்டணிக்கு அதிர்ச்சியளித்த பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்!
சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஓலிவர் ஃபேர்
சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஓலிவர் ஃபேர்படம் | ஏபி

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், பிரான்ஸ் பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன்காரணமாக அங்கு கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தொகுதிகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்பதை தீர்மானிக்கும் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 7) நடைபெற்றது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து, பிரான்சில் வலதுசாரி சித்தாந்தங்களைப் பின்பற்றும் மரைன் லீ பென்னின் ‘தேசிய பேரணி கட்சி’ அதிகாரத்தை கைப்பற்றுமென்ற எதிர்பார்ப்பு பெரிதாக நிலவியது. அதன்படி, பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், இறுதி கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 7) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் வலதுசாரிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இடதுசாரி முன்னணி கூட்டணி அதிக இடங்களில்(180+ இடங்கள்) வெற்றி பெற்றுள்ளது.

வலதுசாரி கூட்டணி 3வது இடத்துக்கு(140+ இடங்கள்) தள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செண்ட்ரிஸ்ட் கட்சி 2வது இடத்தில்(160+ இடங்கள்) உள்ளது. 289 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்கிற சூழலில், இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஓலிவர் ஃபேர்
பிரான்ஸ் நாடாளுமன்றத் தோ்தல்: இரண்டாம் கட்டமாக வாக்குப் பதிவு

இதையடுத்து, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து அதிபர் இமானுவேல் மேக்ரானின் செண்ட்ரிஸ்ட் கட்சி புதிய கூட்டணி அரசை அமைக்கலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இடதுசாரி கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான லா பிரான்ஸ் இன்சோமைஸ் (எல் எஃப் ஐ) கட்சித் தலைவர் ஜீன் லக் மெலென்சாண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஓலிவர் ஃபேர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் பரவலாக நிலவுகிறது. இதனிடையே, அக்கூட்டணியில் அங்கம் வகிகும் கிரீன்ஸ் கட்சித் தலைவர் மரைன் டாண்டெலியரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நீடிக்கிறார்.

இந்தநிலையில், பிரான்ஸ் பிரதமர் கேப்ரியேல் அட்டல் திஙக்ள்கிழமை(ஜூலை 8) ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்பதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இதனிடையே, அதிபர் இமானுவேல் மேக்ரான் புதிய பிரதமர் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிடப் போவதில்லை என்றும், புதிய அரசு அமையும் வரை காத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com