ரஷியா சென்றடைந்தார் மோடி: மாஸ்கோவில் சிறப்பான வரவேற்பு

ரஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, மாஸ்கோவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோவில் மோடி
மாஸ்கோவில் மோடி
Published on
Updated on
1 min read

இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. மாஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாஸ்கோ விமான நிலையத்தில், பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் தி கார்ல்டன் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நட்சத்திர விடுதி வாயிலிலும், இசைக் கருவிகள் இசைக்க பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதர அதிகாரிகளும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

பிரதமா் நரேந்திர மோடி ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமா் மோடி ரஷியா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, ரஷிய அதிபா் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லியில் இந்திய-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரஷியாவில் நடைபெறும் மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ரஷியாவுக்கு செல்வதை உலக நாடுகள் அனைத்துமே மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்றே ரஷியா கூறி வருகிறது.

ரஷியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஆஸ்திரியா செல்லவிருக்கிறார் பிரதமா், அந்நாட்டு அதிபா் அலெக்ஸாண்டா் வான் டொ் பெல்லன், பிரதமா் காா்ல் நெகமா் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கிறார். சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமா் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

தனது பயணத்தின்போது, ரஷிய தலைநகா் மாஸ்கோ மற்றும் ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com