
மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, சுமார் 10 மணி நேரம் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளான அவுட்லுக் மற்றும் விடியோ கேம் மினிகிராஃப்ட் போன்றவை உலகளவில் முடங்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளித்திருக்கும் விளக்கத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன தயாரிப்புகளில் ஏற்பட்ட சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளன, முதற்கட்ட விசாரணையில், இந்த பிரச்னைக்கு சைபர் - தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்திருப்பதாகவும், சைபர் தாக்குதலை எதிர்கொள்ளத் தவறியது குறித்து விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த மைக்ரோசாஃப்ட் பிரச்னை சுமார் 10 மணி நேரம் நீடித்ததாகவும், மைக்ரோசாஃப்ட் சேவைகள் தொடர்பாக சுமார் பத்தாயிரிம் பயனர்கள் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் பிரச்னை ஏற்பட்டு விமான சேவை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட மிக முக்கிய சேவைகள் முடங்கிய இரண்டு வார காலத்துக்குள் மீண்டும் இதுபோன்றதொரு பிரச்னையை மைக்ரோசாஃப்ட் சந்தித்துள்ளது.
தற்போது ஏற்பட்ட சிக்கலின்போது, மைக்ரோசாஃப்டின் 365 மற்றும் கிளவுட் சேவைகளை பயன்படுத்துவதில் பயனர்கள் சிரமத்தை சந்தித்ததாகவும், சிக்கலைக் குறைக்க ரீரௌட்டட் செய்து இருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாற்று ஏற்பாடு பலருக்கும் பயன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் அஸூர் கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தின் இணையதளத்தில் ஒரு கூறப்பட்டிருப்பதாவது, “இது ஒரு விநியோக சேவை மறுப்பு (DDoS) தாக்குதலாக இருந்தபோதிலும்... ஆரம்பகட்ட விசாரணைகள் எங்கள் பாதுகாப்பை செயல்படுத்துவதில் ஏற்பட்ட பிழையால் தாக்குதலைக் குறைப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
நிலைமை மேம்பட்டு இருப்பதாகவும் விரைவில் முழுமையாக சீரடையும் என்று உறுதியளிப்பதாகவும் பயனர்கள் சந்தித்த பிரச்னைக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.