5 மாதங்களில் 504 பயங்கரவாதிகள் கொலை!

5 மாதங்களில் 504 பயங்கரவாதிகள் கொலை!

பாகிஸ்தானில் கடந்த 5 மாதங்களில் 504 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
Published on

பாகிஸ்தானில் கடந்த ஐந்து மாதங்களில் 504 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, "2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மற்றும் பலோசிஸ்தான் மாகாணங்களில் 504 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பான டிடிபி மற்றும் ஹபீஸ் குல் பகதூர் அமைப்பினரின் முக்கியத் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

பணம் பறித்தல், கூலிப்படைக் கொலைகள், பணத்திற்காக கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறி 158க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக 398 தாக்குதல்களை நடத்தினர். இதில் பொதுமக்களில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 200 பாதுகாப்புப் படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com