
ரஷியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மகாராஷ்டிர மாநிலம் ஜல்கெளனை சேர்ந்த 4 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக இந்திய-ரஷிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
ஜூன் 6-ம் தேதி யரோஸ்லாவ்-தி-வைஸ் நோவ்கோரோட் பல்கலைக்கழகம் அமைந்துள்ள வெலிகி நோவ்கோரோட் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹர்சல் ஏ. தேசால், சகோதரர்கள் ஜிஷன் ஏ. பின்ஜாரி, ஜியா பி. பின்ஜாரி மற்றும் மாலிக் குலாம்கெளஸ் முகமது யாகூப் ஆகிய நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகள் அளிக்கும் தகவல்படி, மாணவி உள்பட 5 பேரும் ஆற்றுக் கரையோரத்தில் மாலையில் நடை சென்றுள்ளனர்.
அப்போது நிஷா பி. சோனாவானே என்கிற மாணவி ஆற்றில் தவறி விழவே அவரை மீட்க மீதமுள்ள நால்வரும் ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. மாணவி உயிர் பிழைத்தபோதும் நால்வரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 100 கிமீ தொலைவு அளவுக்கு ஆற்றுப்பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரஷியாவுக்கான இந்திய தூதர் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் மாணவர்களின் உடல்கள் ஜல்கெளனுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.