உக்ரைன் போர்நிறுத்த முயற்சி, ரஷியா ஏவுகணைத் தாக்குதல்: 3-ம் ஆண்டில் தொடரும் போர்!

உக்ரைனில் இரவு நேர தாக்குதல்கள்: ரஷியாவின் தீவிரப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கைகள்
ஜெர்மன் வீரர்களை சந்திக்கும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
ஜெர்மன் வீரர்களை சந்திக்கும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிஏபி
Published on
Updated on
1 min read

உக்ரைன் நாட்டின் கீவ் உள்பட 5 பகுதிகளில் ரஷிய படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக புதன்கிழமை உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் ரஷியா தனது தாக்குதலை சமீப நாள்களில் தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைனின் வான்பாதுகாப்பு படை, ஏவப்பட்ட 30 வான்வழி தாக்குதல்களில் 29-ஐ தகர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றில் பாலிஸ்டிக் கணைகள், க்ரூஸ் கணைகள் மற்றும் சாஹெத் டிரோன்கள் அடக்கம். இந்த தாக்குதல்களில் சிலர் காயமுற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, வான்பாதுகாப்பு படையின் தடுப்பாற்றலை புகழ்ந்துள்ளார். மேலும் நாட்டில் இன்னும் கருவிகள் இருப்பின் ரஷிய தாக்குதலை நாள்தோறும் வெற்றிகரமாக உக்ரைன் எதிர்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் நட்பு நாடுகளிடம் வான்பாதுகாப்பு கருவிகளை தொடர்ச்சியாக கேட்டு வருகிறார் ஸெலென்ஸ்கி. அமெரிக்கா மற்றுமொரு கணைகளை தகர்க்கும் ராணுவ தளவாட அமைப்பை அனுப்பி வைப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷிய ஊடுருவலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு எவ்வாறு உதவுவது என்பதே சர்வதேச அரசுகளின் கூட்டங்களில் பேசுபொருளாக உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 7 வளமிகுந்த நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளனர். அவர்கள் நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷியாவின் சொத்துக்களை பணமாக மாற்றுவது குறித்து இந்த கூட்டத்தில் பேசவுள்ளதாக தெரிகிறது.

அதே வேளையில் உக்ரைனின் பாதுகாப்பு தேவைகள் குறித்தும் மேற்குலக நாடுகளின் ராணுவ மேல்நிலை தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

ரஷியா வடகொரியா மற்றும் ஈரானின் உதவியை நாடி வருகிறது. வடகொரிய அதிபரை மூன்றாவது முறையாக ரஷிய பிரதமர் விளாதிமிர் புதின் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com