
நவீன ஜப்பானிய கவிதை உலகில் முதன்மையான எழுத்தாளராக அறியப்பட்ட கஸுகோ ஷிரைஷி 93 வயதில் காலமானார். ஜாஸ் இசையோடு சேர்ந்த அவரது உணர்ச்சிகரமான கவிதை வாசிப்பு உலகப் புகழ்பெற்றது.
ஜூன் 14-ம் தேதி இதய கோளாறால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா வான்கோவரில் பிறந்த கஸுகோ ஷிரைஷி குழந்தையாக இருக்கும்போதே ஜப்பானுக்கு இடம்பெயர்ந்தார். பதின்பருவத்தில் கவிதை குழுவில் இணைந்தார்.
அவரது 20-வது வயதிலேயே பிரபலமடைய தொடங்கியவர் ஜப்பானின் போர்கால அழிவு குறித்த கவிதைக்காக பெரிதாக கவனிக்கப்பட்டார்.
கவிதை வாசிப்பை நிகழ்த்து கலையாக மாற்றி தனது அடையாளத்தை பதித்தவரின் கவிதைகளில் விநோதங்களும் சிற்றின்பமும் நிறைந்திருக்கும். ஜப்பானின் மரபு கவிதை வடிவான ஹைக்கூவுக்கு பதிலாக அவர் முன்வைத்த கவிதைகளில் நவீனமும் இதற்கு முன் இல்லாத சிந்தனைகளும் இடம்பெற்றிருந்தன. கிழக்கும் வடக்கும் தற்செயலாக அவரது கவிதைகளில் இணைந்ததாக ஜெர்மன் எழுத்தாளர் கிவ்ண்டர் குணர்ட் தெரிவித்துள்ளார்.
1978 மற்றும் 2009-ல் அவரது கவிதைகள் மொழிப்பெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
நினைவுக் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதி அஞ்சலி தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.