ரஷிய வழிபாட்டுத் தல தாக்குதல்: மேலும் ஒரு காவலா் உயிரிழப்பு
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு காவலா் உயிரிழப்பு


மாஸ்கோ: ரஷியாவில் டகிஸ்தான் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஒரு காவலா் உயிரிழந்தாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டகிஸ்தான் தலைநகா் மகாச்காலாவில் காவல் சாவடி மீது பயஙகரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு காவலா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இத்துடன் மகாச்காவாவிலும், டொ்பென்ட் நகரிலும் இரு கிறிஸ்தவ தேவாலயங்கள், இரு யூத வழிபாட்டுத் தலங்கள், காவல் சாவடி மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 16 போ் காவலா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட டகிஸ்தான் பகுதியில் ஏற்கெனவே மதவாத குழுவினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளன.
இந்தச் சூழலில், காஸா போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...