மது அருந்துவதால் ஆண்டுதோறும் உயிரிழப்பது எத்தனை லட்சம் பேர்?

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மது அருந்துவதால் ஆண்டுதோறும் மரணமடைவோரின் சராசரி எண்ணிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மது அருந்துவதால் ஆண்டுதோறும் 26 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

’மது, உடல்நலம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் கோளாறுகள் தொடர்பான உலகளாவிய அறிக்கை’ என்ற பெயரில் நேற்று (ஜூன் 25) உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மது அருந்துவதால் ஆண்டுதோறும் 26 லட்சம் பேர் மரணமடைவதாகம், அதில் 24 லட்சம் பேர் ஆண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் ஆண்டுதோறும் மரணமடையும் மக்களில் 4.7 சதவீதம் பேர் மதுவால் இறப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் மற்ற போதைப் பொருள்களால் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் தகவல்களை மேம்படுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் 40 கோடி மக்கள் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் உடல் கோளாறுகளுடன் வாழ்வதாகக் குறிப்பிடுகிறது. அதில், 21 கோடி மக்கள் மதுவைச் சார்ந்து வாழ்வது தெரிய வந்துள்ளது.

கோப்புப்படம்
ஹிஜாப் தடை: கல்லூரி நிர்வாக முடிவில் தலையிட மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு!

”போதை பழக்கம் தனி நபர்களின் உடல் நலனைக் கடுமையாக பாதித்து, நாள்பட்ட நோய் தாக்கத்தை அதிகப்படுத்தி, மனநலனை பாதிப்படையச் செய்து, உலகம் முழுக்க பலரின் இறப்புக்குக் காரணமாகி வருகிறது. குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெரிய சுமையைக் கொடுத்து, சாலை விபத்துகளை அதிகமாக்கி, வன்முறைகளுக்கும் காரணமாகிறது.

ஒரு வளமான, சமமான சமூகத்தை உருவாக்க நம் ஆரோக்கியத்தை சீர்கேடாக்கும் பழக்கங்களை விரைவில் குறைத்துக்கொள்ள வேண்டும். போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களை அனைவருக்கும் அணுகக் கூடியதாகவும், மலிவாகவும் அமைக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.டெட்ரோஸ் அடானொம் கெப்ரீசியஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் மூலம் உலகளவில் போதைப் பொருள் பயன்பாட்டை குறைத்து 2030-க்குள் நிலையான வளர்ச்சி இலக்கு (எஸ்.டி.ஜி) 3.5-ஐ எட்டுவதற்கானத் தேவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் மது பயன்பாட்டுக்கு இறப்பு விகிதம் என்பது அதிக வருமானம் உள்ள நாடுகளில் குறைவாகாவும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் அதிகமாகவும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019-ல் மதுவால் ஏற்பட்ட மொத்த மரணங்களில், 16 லட்சம் மரணங்கள் தொற்றாத நோய்களால் ஏற்பட்டுள்ளது. அதில் 4,74,000 மரணங்கள் இதயக் கோளாறுகளாலும், 4,01,000 மரணங்கள் புற்று நோயாலும் ஏற்பட்டுள்ளது.

மதுவால் ஏற்படும் மரணங்களில் 20 முதல் 39 வயதுடையவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com