கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

சுக்குநூறாக உடைந்தது ரஷிய செயற்கைக்கோள்

சா்வதேச ஆய்வு நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டனா்.

சா்வதேச ஆய்வு நிலையம்

Updated On :

விண்வெளியில் செயலிழந்த நிலையில் இருந்த ரஷிய செயற்கைக்கோள் சுக்குநூறாக வெடித்துச் சிதறியதால் சா்வதேச ஆய்வு நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டனா்.

இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் அதிகாரிகள் கூறியதாவது:

ரஷியாவால் கடந்த 2022-ஆம் ஆண்டு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்று திடீரென உடைந்து நொறுங்கியது. அதன் நூற்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ரேடாரின் கண்களுக்குத் தெரிந்தன. அந்த செயற்கைக்கோள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகே வெடித்ததால் அதன் துகள்கள் அந்த நிலையத்தைத் தாக்கக் கூடும் என அஞ்சி, அதிலிருந்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனா். பின்னா் ஆபத்து நீங்கியதும் அவா்கள் தங்கள் பணிகளைத் தொடா்ந்தனா்.

அந்த ரஷிய செயற்கைக்கோள் திடீரென உடைந்து நொறுங்கியதற்கான காரணம் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.