

‘டிராகன் பால்’ உள்ளிட்ட புகழ்பெற்ற ஜப்பானிய மாங்கா காமிக்ஸ்களை உருவாக்கிய அகிரா டோரியாமா காலமானதாக அவரது ஸ்டூடியோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1984-ல் தொடங்கிய இவரது ‘டிராகன் பால்’ காமிக்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொலைக்காட்சி தொடர்களாகவும் விடியோ விளையாட்டுகளாகவும் படமாகவும் மாற்றப்பட்டது.
மார்ச் 1-ம் தேதி 68 வயதான அகிரா டோரியாமா மூளையில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் உயிரிழந்ததாக பேர்ட் ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்தது.
இது குறித்து “பல தொடர்களில் அவர் பணியாற்றி வந்தார். நிறைவு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து அவர் நிறைய எதிர்பார்ப்பு கொண்டிருந்தார்” என பேர்ட் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது.

டிராகன் பால் கதாபாத்திர சிற்பம் நியூயார்க் காமிக் கான் நிகழ்வில்...
சக வரைகதை ஆசிரியர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
40 ஆண்டுகளாக ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு பேர்ட் ஸ்டூடியோ நன்றி தெரிவித்துள்ளது.
1955-ல் ஜப்பான் நாட்டில் ஐச்சி மாகாணத்தில் பிறந்த அகிரா, 1978-ல் ‘வாண்டர் ஐலேண்ட்’ என்கிற காமிக்ஸ் தொடர் மூலம் அறிமுகமானார்.
பெரியளவில் இந்த தொடர் வெற்றி பெற்று அகிரா புகழ் வெளிச்சத்துக்கு வந்தபோதும் அவர் தனித்தே இருந்தார்.
அவர், ‘மாங்கா எழுதிக் கொண்டிருப்பது மட்டும் எனக்கு போதுமானது” என 1982-ல் பேட்டி அளித்துள்ளார்.
‘டிராகன் பால்’ என்பது சோன் கோகு என்கிற பையனின், நாம் விரும்புவதை நிறைவேற்றும் ஏழு மாய பந்துகளுக்கான தேடலை மையப்படுத்திய கதை. உலகம் முழுவதும் 26 கோடி பிரதிகள் விற்றது.
2000-ல் இவர் உருவாக்கிய ‘சாண்ட் லேண்ட்’ என்கிற கதையைத் தழுவி உருவான அனிமேஷன் படம் டிஸ்னி பிளஸில் இந்தாண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோலிவுட் ஸ்டூடியோ!
கோலிவுட் ஸ்டூடியோ!

டிராகன் - 2 அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!

தியாகராஜன் குமாரராஜா - விஜய்சேதுபதி கூட்டணி..! ஜப்பானிலும் வெளியாகும் பாக்கெட் நாவல்!
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

