

நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்ட 6 டிரக்குகள் காஸாவுக்குள் முதன்முறையாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் நுழைவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் பொருள்களை ஏற்றிவரும் 6 டிரக்குகள் எல்லை வேலியைத் தாண்டி காஸாவுக்குள் நுழைந்தன.
சோதனை ஓட்டமாக இந்த வழி கருதப்படுவதாகவும் இஸ்ரேல் இதன் விளைவுகளை ஆராயும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல், ஹமாஸ் இந்த நிவாரண உதவிகளுக்கு கட்டளையிடுவதாக கூறியது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் காஸா மக்களுக்கு நிவாரணம் கிடைக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காஸாவின் வடக்குப் பிராந்தியத்துக்கு உதவி கிடைக்க கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.
தெற்கு எல்லை வழியாக நுழையும் டிரக்குகள் திரளான மக்கள், இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவற்றைக் கடந்து மறுமுனைக்கு செல்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.
பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுவதாக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு தலைவர் செவ்வாய்கிழமை குற்றம் சாட்டினார்.
அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் வானில் இருந்து நிவாரண பொருள்களை பாராசூட் மூலம் வீசுதல், கடல் மார்க்கமாக அனுப்புதல் ஆகிய முறைகளைச் சோதித்து வருகின்றன. இருப்பினும், தரை வழியாக அனுப்பப்படுவதே பயனுள்ளதாக இருக்கும் என கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.