நிவாரண உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதலா? இஸ்ரேல் விளக்கம்!

காஸா நிவாரண மையத்தில் பதற்றம்: இஸ்ரேல் தாக்குதல் மறுப்பு
ரமலான் மாதத்தில் உணவு பொருள்கள் வாங்க திரண்ட காஸா மக்கள்
ரமலான் மாதத்தில் உணவு பொருள்கள் வாங்க திரண்ட காஸா மக்கள்AP

வடக்கு காஸா பகுதியில் நிவாரண பொருள்களை வழங்கும் மையத்துக்கு அருகில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியானதாகவும் 155 பேர் காயமுற்றதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இஸ்ரேல் ராணுவம் இதனை தவறான தகவல் என மறுத்திருப்பதோடு இந்த நிகழ்வை மதிப்பிட முழுமையாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சில வாரங்களாக வடக்கு காஸாவில் நிவாரண பொருள்கள் வழங்கும் மையமாக திகழும் குவைதி அருகில் வியாழக்கிழமை வன்முறை வெடித்தது. நிவாரண உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அமெரிக்க விமானத்தில் நிவாரண பொருள்கள்
அமெரிக்க விமானத்தில் நிவாரண பொருள்கள்AP

பிப்.29 அன்று நிவாரண பொருள்கள் ஏற்றி வந்த டிரக்கை சூழ்ந்த மக்கள் நெரிசல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் 118 பேர் பலியாகினர். இஸ்ரேல் தங்களை நோக்கி முன்னேறி வந்த மக்களை தாக்கியதாக தெரிவித்தது.

அங்கிருந்தவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள், அதிகமான பேர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்ததாக தெரிவித்தனர். ஆனால் இஸ்ரேல், உணவுக்காக மக்கள் மோதியதால் அங்கு கலவரம் ஏற்பட்டதாக தெரிவித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து, அமெரிக்கா காஸாவுக்கு நிவாரணம் அனுப்பும் புதிய வழிகளை திறப்பது குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com