கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் மரணம்

கனடாவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் மரணம்.
கனடாவில் கொளுத்தும் வெயிலால தீப்பற்றி எரிந்த மரங்கள்
கனடாவில் கொளுத்தும் வெயிலால தீப்பற்றி எரிந்த மரங்கள்

ஒட்டாவா : கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், இந்திய வம்சாவளி தம்பதியினர் வசித்து வந்த வீடு தீப்பற்றி எரிந்ததில், தம்பதியும் அவர்களது மகளும் பலியாகியுள்ளனர்.

பிராம்டன் பகுதியில் பிக் ஸ்கை வே மற்றும் வான் கிர்க் டிரைப் பகுதிகளுக்கு இடையே இருந்த இவர்களது வீடு, மார்ச் 7ஆம் தேதி நிகழ்ந்த மர்ம தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.

பிராம்டன் பகுதியில் பிக் ஸ்கை வே மற்றும் வான் கிர்க் டிரைப் பகுதிகளுக்கு இடையே இருந்த இவர்களது வீடு, மார்ச் 7ஆம் தேதி நிகழ்ந்த மர்ம தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.

வீட்டில் பற்றிய தீ அணைக்கப்பட்டதும், வீட்டுக்குள் எரிந்த நிலையில் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

முதற்கட்ட விசாரணையில்தான், அந்த வீட்டில் 51 வயதாகும் ராஜீவ் வரிகு, அவரது மனைவி ஷில்பா கோதா (47) இவர்களது 16 வயது மகள் மஹேக் வரிகு ஆகியோர் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜீவ் ஒன்டாரியா சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் தீப்பற்றிருப்பது விபத்து போல தெரியவில்லை என்றும், மர்ம விபத்து என்றே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் இங்கு கடந்த 15 ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதாகவும், இவர்களுக்கு எந்த பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் தீப்பற்றிய சில வினாடிகளில், வீடு முழுவதும் பரவியதாகவும், சிறிது நேரத்தில் வீடு முழுக்க தரைமட்டமானதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com