/

2024-க்குள் அதிபா் தோ்தல்: ரணில் விக்கிரமசிங்க

..வலது.. கீழ்... 2024-க்குள் அதிபா் தோ்தல்: இலங்கை பிரதமா் அறிவிப்பு

News image
Updated On :19 மார்ச் 2024, 7:44 pm

கொழும்பு: இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபா் தோ்தல் நடத்தப்படும் என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளாா்.

அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை வரும் செப்டம்பா் மாதத்துக்குள் தோ்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அந்தத் தோ்தல் நவம்பா் மாத மத்தியில் நடத்தப்படவேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஆயுள் 2025-இல்தான் முடிகிறது என்பதால் அந்த ஆண்டில்தான் புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடத்தப்படவேண்டும். ஆனால், அதிபர் விரும்பினால் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தோ்தலை நடத்தலாம் என்ற நிலையில், அதிபா் தோ்தலுடன் சோ்த்து நாடாளுமன்றத் தோ்தலும் நடத்தப்படும் என்று ஊகத் தகவல்கள் வெளியாகின.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த ஆண்டில் அதிபா் தோ்தல் மட்டுமே நடைபெறும் என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளாா்.