ஒலிம்பிக் அணிவகுப்பில் ரஷியா, பெலாரஸ் நாடுகளுக்கு அனுமதி மறுப்பு!

ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு ஒலிம்பிக் அணிவகுப்பு மறுப்பு!
பாரிஸ் ஒலிம்பிக் வளையம் (கோப்புப் படம்)
பாரிஸ் ஒலிம்பிக் வளையம் (கோப்புப் படம்)AP

பாரிஸில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

இரு நாடுகளில் இருந்தும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வான வீரர்கள், நாட்டின் கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் சுயேட்சையான வீரர்களாக கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

2022-ல் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் பின்விளைவாக இந்த முடிவை ஒலிம்பிக்ஸ் கமிட்டி எடுத்துள்ளது.

வழக்கமாக அரங்கில் நடைபெறும் அணிவகுப்பு, இந்த முறை சென் ரிவர் பகுதியில் ஒலிம்பிக் அணிகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடுகள் சாராத தனி போட்டியாளர்களாக ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும் அவர்களுக்கு தனியாக உருவாக்கப்பட்ட கொடியும் கீதமும் இசைக்கப்படும். அணிவகுப்பு தவிர்த்து மற்ற தொடக்க நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்பார்கள் என கமிட்டி தெரிவித்துள்ளது.

ரஷியாவின் ஒலிம்பிக் பங்கேற்பை எதிர்த்து வரும் பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ, கமிட்டியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com