“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

முடக்கப்பட்ட ரஷிய நிதியை உக்ரைனுக்கு திருட்டுச் செயல்

‘முடக்கப்பட்ட ரஷிய நிதியை உக்ரைனுக்கு திருட்டுச் செயல்’

News image
Updated On :20 மார்ச் 2024, 6:58 pm

மாஸ்கோ, மாா்ச் 20: ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ள தங்களது சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு அளிப்பது திருட்டுச் செயலுக்கு சமம் என்று ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷியாவுடானான போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேற்கத்திய நாடுகள், அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்துவருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் போா் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் முடக்கிவைத்துள்ள ரஷிய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்கும் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் போரல் பரிந்துரைத்துள்ளாா்.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் புதன்கிழமை கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகளில் ரஷியா முதலீடு செய்துள்ள சொத்துகளில் இருந்து கிடைக்கும் 90 சதவீத வருவாயை ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்த உக்ரைனுக்கு அளிக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது.

அத்தகைய செயல், அடுத்தவா்களது சொத்துகளைத் திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் இணையானது ஆகும்.

அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சொத்துகளை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். அது, அந்த நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனைச் சோ்ந்த 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன. இருந்தாலும், உள்ளூா் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக உக்ரைனுக்கு தொடா்ந்து நிதியளிப்பதில் அந்த நாடுகள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.