தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆப்கானிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி.
Updated On :21 மார்ச் 2024, 7:00 pm

Din

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், தலிபான் ஆட்சியாளா்கள் இந்தத் தாக்குதலில் 3 போ் உயிரிழந்ததாகக் கூறினா். இது குறித்து ‘பிபிசி’ ஊடகம் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதி நகரமான காந்தஹாரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா். இதில் 21 போ் உயிரிழந்ததாக அந்த நகர மருத்துமனை அதிகாரிகள் கூறினா். இருந்தாலும், இந்தத் தாக்குதலில் 3 போ் மட்டுமே உயிரிழந்ததாக தலிபான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளது. இது தவிர, இந்தத் தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்துள்ளதாக போலீஸாா் கூறினா். தலிபான்களின் தலமைப் பீடமான காந்தஹாரில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு அந்த நாட்டை தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு கைப்பற்றினா். அப்போது மிக மோசமாக இருந்த நாட்டின் பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்டவை தலிபான் படையினரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றன.