பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

பேஸ்புக்-நெட்பிளிக்ஸ் உறவு: நீதிமன்ற ஆவணங்கள் அம்பலம்
Mark Zuckerberg
Mark Zuckerberg
Published on
Updated on
1 min read

மெட்டா குழுமத்தின் சமூக வலைத்தளமான பேஸ்புக் மீது அதன் பயனர்கள் தொடர்ந்திருக்கும் நம்பிக்கை முறிவு வழக்கின் நீதிமன்ற ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக், தனது பயனர்களின் நேரடி குறுஞ்செய்திகளை பார்க்க நெட்பிளிக்ஸுக்கு அனுமதி அளித்ததாக அந்த ஆவணங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. நெட்பிளிக்ஸ் பயனர்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள பேஸ்புக் இதனை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் உடனான விளம்பரதாரர் உறவை இழக்காமல் இருக்க தனது விடியோ சேவைகளை பேஸ்புக் குறைத்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் நிறுவனங்கள் அளவுக்கு பேஸ்புக் ஒளிபரப்பு சேவையில் வளரவில்லை எனினும் சில விளையாட்டு போட்டிகள், பழைய வலைத்தொடர்களை ஒளிபரப்ப 2017-ல் உடன்படிக்கை மேற்கொண்டது.

2022-ம் ஆண்டில் செலவு குறைப்பு நடவடிக்கையின்போது நேரடி விடியோ ஒளிபரப்பு சேவைகளை நிறுத்தியது பேஸ்புக். பேஸ்புக் மற்றும் நெட்பிளிக்ஸுக்கு இடையீட்டு நபராக இருந்தது ரீட் ஹேஸ்டிங்க்ஸ்.

நெட்பிளிக்ஸின் நிறுவனரும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ரீட் ஹேஸ்டிங்க்ஸ், பேஸ்புக்கிலும் இயக்குநர் குழுவில் இருந்துள்ளார்.

ரீட்டிடம் நீதிமன்றம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக வெளியான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை ஆதிக்கம் மற்றும் பயனர்களின் விருப்பம் சார்ந்து மிகப்பெரும் வணிக நிறுவனங்களிடையேயான ரகசிய உறவுகள் குறித்து இந்த நீதிமன்ற ஆவணம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com