
செளதியைச் சேர்ந்த பெண்ணுரிமை போராளிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை இரண்டு உலக அமைப்புகள் எதிர்த்துள்ளன. போராளிக்கு உடனடி மற்றும் கட்டுப்பாடுகளற்ற விடுதலையை அளிக்க அவை கோரியுள்ளன.
கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் ஜனவரியில் மனஹெல் அல்-ஒதைபி ஆஜர்படுத்தப்பட்டதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஏஎல்க்யூஎஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்களுக்கு செளதி அரசு அளித்த பதிலில் அல்-ஒதைபி தனது பயங்கரவாத குற்றங்களை ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.
ஆடை சுதந்திரம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆண்களால் பாதுகாக்கப்படுவதற்கு மாற்றான அமைப்பு கோரும் அழைப்பு, முக்கிய முடிவுகளை பெண்கள் சுதந்திரமாக எடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தது ஆகியவையே அல்-ஒதைபி மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் என அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
நவம்பர் 2022 கைதுக்குப் பிறகு அல்-ஒதைபி உடல் மற்றும் மன ரீதியாக ரியாத் சிறையில் வன்முறைகளை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் அவரது குடும்பம் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கால் உடைக்கப்பட்டு உடல்ரீதியாக வன்முறைக்குள்ளாகியுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்டுள்ளன என அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
2017-ல் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு செளதியில் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும் அரசு- விமர்சகர்கள் மற்றும் உரிமைப் போராளிகளை ஒடுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பு அநீதியானது என அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.