

தைபே: தைவானில் இன்று பிற்பகல் 03.51 மணி அளவில் ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகுகளாகப் பதிவானது என்று மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்தது.
டைடுங் கவுண்டி ஹாலிலிருந்து தெற்கு-தென்மேற்கே 10.2 கி.மீ தொலைவில் அதன் மையப்பகுதி 26.8 கி.மீ ஆழத்தில் இருந்ததாக மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் ரிக்டரில் அளவில் 6.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் தைவானை உலுக்கியது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 87 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.