15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

News image

கோப்பிலிருந்து..

Updated On :3 மே 2024, 5:14 am

பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பயணிகள் 20 பேர் பலியாகினர்.

காரகோரம் நெடுஞ்சாலையில், டியாமெர் மாவட்டத்தில், கில்ஜிட் பால்டிஸ்டான் மாகாணத்தில் மலைமீது சென்றுகொண்டிருந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேருந்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், 15 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.