
இப்போதுதான் 5ஜி அலைக்கற்றைக்கே நாம் வளர்ந்துள்ள நிலையில் ஜப்பான் நாட்டில் 6ஜி அலைக்கற்றை உபயோகிக்கக் கூடிய கருவியை சோதித்து பார்த்துள்ளனர்.
தற்போதுள்ள 5ஜியின் வேகத்தை விட 20 மடங்கு அதிவேகமாக 6ஜி செயல்படுகிறது. 6ஜியில் ஒரு நொடிக்கு 100ஜிபி அளவில் தரவு பரிமாற்றம் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டோகோமோ, என்டிடி கார்பரேஷன், என்இசி கார்பரேஷன் மற்றும் புஜிட்சூ ஆகிய ஜப்பானின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த 6ஜி சாத்தியமாகியுள்ளது.
தற்போது சோதித்து பார்க்கப்பட்டுள்ளது தனியான ஒரு கருவி மட்டுமே, ஒரு வலைப்பின்னல் அளவுக்கு இன்னும் இது பரிசோதிக்கப்படவில்லை.
இத்தனை வேகம் கொண்ட அலைகள் மிக குறுகிய பரப்பில் மட்டுமே செயல்படுவது 6ஜி வளர்ச்சியில் பெரிய தடையாக இருக்கும்.
தொலைதொடர்பு துறையில் இது மற்றுமொரு மைல்கல் என்றாலும் இதனை நடைமுறைப்படுத்த வெகுகாலம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.