சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்! பாகிஸ்தானில் வெப்ப அலை எச்சரிக்கை!!

வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு பாகிஸ்தானில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
- K.M. Chaudary
Updated On :21 மே 2024, 11:17 am

DIN

புதிய வெப்பஆலை வீசக்கூடும் என்பதால், மக்கள் யாரும் தேவையன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகி அதனால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் மக்கள் தொகை அதிகம் நிறைந்த பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஒரு வாரத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இந்த மாதம் முழுக்க கடுமையான வெப்பம் நிலவும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரி ஜாஹீர் அகமது பாபர் தெரிவித்துள்ளார். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்றும், இந்த வாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்ததாகவும் பாபர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில், பாகிஸ்தான் நாட்டைத் தாக்கிய இயற்கைப் பேரழிவுகளில் இது அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. உயரும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகி அதனால் நாட்டுக்குள் வெள்ளம் ஏற்பட்டால், நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மூழ்கிவிடலாம் என்று கூறப்படுகிறது.

Story image

1961ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான், வரலாறு காணாத மழையை கண்டுள்ளது. இந்த மாதத்தில் வழக்கமாக பொழியும் மழையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக மழை பெய்தது. கடந்த மாதம் பெய்த மழையால் பாகிஸ்தானில் ஏராளமானோர் பலியாகினர், ஏராளமான சொத்துகள் நாசமாகின. பருவநிலை மாறுபாடு காரணமாகவே பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1,739 பேர் பலியாகினர். பல லட்சம் மதிப்பில் சொத்துகள் நாசமாகின. அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்தே நாடு மீள முடியாமல் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த இயற்கைப் பேரழிவு நாட்டைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில், வெப்ப அலைகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

ஹீட் ஸ்டிரோக் எனப்படும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமானது. சிலர் மயங்கி விழ நேரிடலாம். சிலருக்கு உடல் உறுப்புகள் செயலிழக்கலாம், சிலர் இறக்கவும் நேரிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.