
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க், கல்லூரி காலத்தில் எழுதிய இயற்பியல் வீட்டுப் பாடம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு பயனாளர் பகிர்ந்திருக்கும் எலான் மஸ்க், கல்லூரியில் எழுதிய இயற்பியல் வீட்டுப் பாடத்தில், மிகப்பெரிய கணக்கை எலான் மஸ்க் கைப்பட எழுதியிருக்கும் புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. 4 கிலோ மீட்டரைக் கடக்க ஒரு மணி நேரம்.. பெருமிதத்தில் முதல்வர்
இது தான் எழுதிய வீட்டுப்பாடம்தான் என்று எலான் மஸ்க்கும் உறுதி செய்திருக்கிறார். அதோடு, சில பக்கங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எலான் மஸ்க் படித்த போது, இந்த வீட்டுப்பாடம் எழுதப்பட்டுள்ளது. இதனை பயனாளர் ஒருவர் பகிர, அதற்கு எலான் மஸ்க் கூட தனது பதிலை பதிவு செய்திருக்கிறார். இதையடுத்து, மேலும் இரண்டு பக்கங்களைக் கொண்ட அந்த பயனாளர் இணைத்திருக்கிறார்.
இதற்கு பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.