
தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும், மக்களுக்கு அர்ப்பணிக்கவும் கோவை சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள்கள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு இன்று வருகை தந்துள்ளார்.
சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட அவா், காலை 11 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கிருந்து, விளாங்குறிச்சி சென்ற முதல்வா் அங்கு 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்துவைத்தார்.
மேலும் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
இந்த நிலையில், கோவையில் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதல்வருக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என பல கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. எல்காட் வரை முதல்வரின் வாகனம் ஊர்ந்து சென்று மக்கள் திரண்டிருந்து அளித்த வரவேற்பை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பான விடியோக்களையும் தமிழக முதல்வர் பகிர்ந்துள்ளார். அதில், “நல்லா இருக்கீங்களா தலைவரே…” எனக் கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு.
4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது!
கோவை மக்களின் அன்பு என்று இதயக் குறியை பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.