அதிபர் தேர்தல்: வெள்ளை மாளிகையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
photo credit: ANI
photo credit: ANI
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபா் தோ்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. நிகழாண்டு அந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முதலில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டாா். குடியரசு கட்சி வேட்பாளராக அந்நாட்டின் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறாா்.

எனினும் வயது முதிா்வு காரணமாக பைடனின் செயல்திறனில் சுணக்கம் ஏற்பட்டதால், தோ்தலையொட்டி டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியது விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவரின் சொந்தக் கட்சியினரே அழுத்தம் அளித்தனா்.

இதையடுத்து, அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து பைடன் விலகினாா். இதைத் தொடா்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளராக அந்நாட்டின் தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டாா். தோ்தலில் வெற்றி பெறுபவா் யாா் என்பதில் கமலாவுக்கும் டிரம்புக்கும் இடையே சமமான போட்டி நிலவுவதாக அமெரிக்க ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

எனினும் வெற்றி பெறுவதற்கு கமலா ஹாரிஸுக்கு சற்று கூடுதல் வாய்ப்புள்ளதாக சில ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அதிகாரபூா்வ வாக்குப் பதிவு நாளான செவ்வாய்க்கிழமை கோடிக்கணக்கான வாக்காளா்கள் வாக்குப் பதிவு மையத்துக்கு வந்து மிகுந்த ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

வாக்குப் பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்குத் தொடங்கியது. அதில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனிடையே வாக்கு எண்ணிக்கையையொட்டி தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏராளமான போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வெள்ளை மாளிகையை நோக்கி திரண்டு வந்தனர்.

இதனால் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். எனவே, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க இந்த முறை முன்னெச்சரிக்கையாக வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com