பொருளாதாரத்தில் முன்னேறி வருவதாகத் தெரிவித்த ரஷிய அதிபர் புதின், பொருளாதாரத்தில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்தி வருவதாகவும் கூறினார்.
ரஷியாவில் சோச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்தியா பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.
ரஷியாவில் சோச்சியில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்தியா - ரஷியா இடையிலான நட்புறவு குறித்து பேசினார். புதின் பேசியதாவது, ``இந்தியா ஒரு சிறந்த நாடு. இந்தியாவுடனான ரஷியாவின் உறவு அனைத்து திசைகளில் இருந்தும் மேம்பட்டு வருகிறது.
இந்தியா, ஆண்டுதோறும் 1.5 பில்லியன் மக்களைக் கொண்டிருப்பதன் மூலம், தற்போது மக்கள்தொகையில் மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது. உலகின் வல்லரசுகளில் இந்தியா சேர்க்கப்படுவதற்கு தகுதியானது.
மேலும், இந்தியாவுடனான ரஷியாவின் ஒத்துழைப்பு உறவு ஒவ்வோர் ஆண்டும் பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியா - ரஷியா இடையிலான உறவுகள் வளர்ந்து வருகிறது. இந்திய ஆயுதப் படைகளில் எத்தனை வகையான ரஷிய ராணுவ உபகரணங்கள் உள்ளன என்பது உங்களுக்கே தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய இந்தியா - சீனா எல்லை பிரச்னை குறித்தும் பேசினார். இந்தியா - சீனா எல்லை பிரச்னை குறித்து அவர் கூறியதாவது, ``தங்கள் நாடுகளின் எதிர்காலத்தை மனதில் வைத்திருக்கும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர்கள், சமாதானத்திற்கான சமரசங்களைத்தான் தேடுகிறார்கள்; இறுதியில் அவற்றைக் கண்டுபிடித்தும் விடுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.