

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை கைது செய்வீர்களா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதுபோல ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "ரஷிய அதிபர் புதினை பிடிப்பதற்கு அவசியமிருக்காது. அது தேவைப்படாது என்று நினைக்கிறேன்.
அவருடன் (புதின்) நான் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டுள்ளேன். இருப்பினும், எனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.
நான் 8 போர்களைத் தீர்த்து வைத்துள்ளேன். இது எளிதான போர்களில் (ரஷியா - உக்ரைன்) ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். கடந்த மாதம், 31,000 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் ரஷிய வீரர்கள்; மேலும், ரஷிய பொருளாதாரமும் மோசமாகி உள்ளது" என்று கூறினார்.
வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிபரை அமெரிக்கா கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மறைமுகமாக புதின் குறித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.