

உக்ரைனுடனான போர் முடிவு குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், செய்தியாளர்களுடன் பேசுகையில், "நான் இங்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை சந்தித்தேன். அவருடனான சந்திப்பு நன்றாக இருந்தது.
ரஷிய அதிபர் புதினை அமெரிக்க பிரதிநிதிகள் குழு நாளை சந்திக்கவுள்ளனர்" என்று தெரிவித்தார்.
மேலும், புதினை குறிப்பிட்ட டிரம்ப், நிறைய பேர் பலியாகியுள்ளனர்; போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.
ரஷியா - உக்ரைன் இடையே 2022 முதல் போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக, போர்நிறுத்த நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
War has to end: Trump's message to Russian Vladimir President Putin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.