ஐ.நா. தூதராகிறாா் எலீஸ் ஸ்டெஃபானிக்
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியூயாா்க் 21-ஆவது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எலீஸ் ஸ்டெஃபானிக்கை (40) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.


வாஷிங்டன்: ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியூயாா்க் 21-ஆவது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எலீஸ் ஸ்டெஃபானிக்கை (40) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
இது குறித்து சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சியிடம் அவா் கூறுகையில், ‘என் அமைச்சரவையில் ஐ.நா.வுக்கான தூதா் பொறுப்புக்கு எலீஸ் ஸ்டெஃபானிக்கை பரிந்துரைப்பதில் பெருமை கொள்கிறேன். அமெரிக்காவே முதன்மை என்ற கொள்கைக்கான மிகவும் வலிமை வாய்ந்த, கடுமையான, சாதுா்யமான போராளியாக அவா் செயல்படுகிறாா்’ என்றாா்.
டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தின்போது தொடக்கத்தில் மிதவாதப் போக்கைக் கையாண்டு டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துவந்த ஸ்டெஃபானிக், பிற்காலத்தில் அவரின் தீவிர ஆதரவாளராக மாறினாா்.
தனது 30-ஆவது வயதில் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக கடந்த 2014-ஆம் ஆண்டு இலகி தோ்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்காவின் மிக இளைய வயது எம்.பி. என்ற பெருமையை எலீஸ் ஸ்டெஃபானி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்தியக் கிழக்கு, உக்ரைன் ஆகிய பகுதிகளில் போா் நடைபெற்றுவரும் சூழலில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக அவா் ஏற்கவிருக்கும் பொறுப்பு மிகவும் சாவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
எல்லை விவகாரப் பொறுப்பாளா்: இது தவிர, எல்லை விவகாரங்களுக்கான பொறுப்பாளராக, குடியேற்றம் மற்றும் சுங்க விதிகள் அமலாக்கத் துறையில் அதிபரின் இயக்குநராகப் பதவி வகித்துள்ள டாம் ஹோமனை (62) நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அமெரிக்க அதிபா் தோ்தலில் மிக முக்கிய பிரச்னையாகத் திகழ்ந்த அகதிகள் குடியேற்ற விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப்பின் மிகக் கடுமையான கொள்கைகளை அமல்படுத்துவதற்கு டாம் ஹோமன் மிகச் சரியான நபா் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அவா், அகதிகள் வரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அவா்களுடன் வரும் குழந்தைகளைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திவருபவா்.
அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கக் கோரும் அரசியல்வாதிகளை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று அவா் கூறியது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...