இஸ்ரேல்
இஸ்ரேல்

ஹமாஸின் ஆயுதங்கள் தயாரிக்கும் கருவிகளைக் கைப்பற்றிய இஸ்ரேல்!

ஹமாஸ் படையினருக்குச் சொந்தமான ஆயுதங்கள் தயாரிக்கும் கருவிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
Published on

பாலஸ்தீனத்தில் உள்ள ஹெம்ரோன் பகுதியில் இருந்த ஹமாஸ் படையினருக்குச் சொந்தமான ஆயுதங்கள் தயாரிக்கும் கருவிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.

ஹெம்ரோன் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய உற்பத்தி கருவிகளை பறிமுதல் செய்தனர்.

சம்பவ இடத்தில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உள்பட 38 வயதுடைய நபர் என இருவரை கைது செய்து அவர்களிடம் இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

5,250 பேர் கைது

ஜோடே பகுதியில் காவல் கண்காணிப்பாளார் மோஷே ஃபின்ஷி கூறுகையில், ''எல்லைப் பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஓய்வின்றி நமது படையினர் கண்காணித்து வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான நபரிடம் விசாரணை நடத்தி ஆயுதங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடனான இந்த சோதனையானது, எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான, தீவிரவாதத்துக்கு எதிரான எங்கள் இடைவிடாத போரின் ஓர் பகுதியாகும்'' எனக் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினரைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து இஸ்ரேல் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஹமாஸ் படையினர் இஸ்ரேல் எல்லைகளில் தாக்குதல் நடத்திய கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இதுவரை, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 5,250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 40% பேர் ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் ராணுவ தளபதி உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com