நியூசிலாந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு! 40,000 பேர் போராட்டம்! காரணம் என்ன?

பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சுமார் 40,000 பேர் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டோர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர்.AP
Published on
Updated on
1 min read

நியூசிலாந்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, சுமார் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1840 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும் இடையே போடப்பட்ட வைடாங்கி ஒப்பந்தத்தின்படி, அவர்கள் பயன்படுத்திய நிலங்களை தாங்களே வைத்துகொள்ளலாம் என்றும், ஆங்கிலேயே அரசுக்கு ஒப்படைக்காமல் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடி மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்திருத்தம் நியூசிலாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, செவ்வாய்க்கிழமை (நவ. 19) சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய ஆடையணிந்து, பாரம்பரிய ஆயுதங்களுடன் பேரணியாகவும், கார்களிலும் சென்ற அவர்கள், மாவோரி கொடியுடன் வெலிங்டன் நகரம் முழுவதையும் முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர்.AP

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து, இளம் எம்.பி. ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி (22) கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹக்கா முழக்கத்தில் ஈடுபட்டதுடன், மற்ற உறுப்பினர்களும் அவருடன் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இதனால், அவைத் தலைவர் ஜெர்ரி பிரவுன்லி அமர்வை தற்காலிகமாக நிறுத்தி ஒத்திவைத்தார்.

5.3 மில்லியன் மக்கள்தொகையில் 20 சதவிகிதமாக இருக்கும் மாவோரி இனத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல தசாப்த காலக் கொள்கைகளை மாற்றியமைப்பதாக இந்த மசோதா இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு குறைவான ஆதரவே இருப்பதால், ஒரு சட்டமாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com