லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Published on
Updated on
1 min read

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான 14 மாதங்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆஸி.: சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை மசோதா நிறைவேற்றம்!

அமெரிக்கா - பிரான்சின் ஒப்பந்தம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகை தொலைக்காட்சி உரையில் பேசுகையில், “இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி, புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினா் போராட்டத்தில் வன்முறை

இதனால், லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போர் முடிவுக்கு வரும். போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும். இது இரு நாடுகளுக்கு இடையேயான விரோதப் போக்கை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவர லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் எடுத்த துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன். இது அமைதிக்கு சாத்தியம் என்பதை காட்டுகிறது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லையில் அமெரிக்க ஆயுதக்குழுக்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், நாங்கள் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து தேவையான உதவிகளை வழங்குவோம்” என்றார்.

வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் போராட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.