யேமனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
யேமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது.


யேமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது.
ராணுவ விமானங்கள் மற்றும் போா்க் கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஹூதிக்களின் ராணுவத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
யேமனில் ஹூதிக்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் துறைமுக நகரான ஹொடைடாவில் உள்ள விமான நிலையம் மற்றம் கத்தீப் பகுதியில் உள்ள ராணுவத் தளங்கள் மீது 7தாக்குதல்களும், சனா நகரில் உள்ள செய்யானா பகுதியில் 4 தாக்குதல்களும், தாமா் மாகாணத்தில் 2 தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக ஹூதி ஊடகங்கள் தெரிவித்தன.
காஸாவில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனா். அதேபோல் யேமன் நாட்டில் நுழைந்த அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினா். கடந்த வாரம் அமெரிக்க போா்க் கப்பல்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்றனா். இதையடுத்து, மேயனில் செயல்பட்டு வரும் ஹூதிக்களின் ராணுவத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் தூதா் அழைப்பு: ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதிக்கள் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தெற்குலகின் குரலாக ஒழிக்கும் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும் என இந்தியாவுக்கான ஈரான் தூதா் இராஜ் இலாஹி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...