பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காஸாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல் - 21 பேர் பலி!

வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா குடிமக்கள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

News image
- AP
Updated On :6 அக்டோபர் 2024, 7:51 am

DIN

காஸாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா குடிமக்கள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

மத்திய டேய்ர் அல்-பாலாவில் உள்ள மசூதி வளாகத்தில் அமைந்துள்ள நிவாரண முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த மசூதியில் இருந்து, ஹமாஸ் ஆயுதப்படையினர் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில், மசூதியில் தஞ்சமடைந்திருந்த பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு பலத்த கயம் ஏற்பட்டுள்ளதகவும், இதன் காரணமாக, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.