தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!

ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.

Death toll from attack on school in Iran’s south rises to 85

ஈரான்.

Published On :

ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முதல்கட்டமாக 40 மாணவிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இத்தகவலை அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனமான 'இர்னா' உறுதி செய்திருந்தது. தற்போது இந்த தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. பள்ளி மீதான தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

Summary

The death toll from an attack Saturday on a school in Iran’s south has risen to 85, the judiciary said, after the US and Israel launched strikes on the Islamic republic.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.