ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

43 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
‘கமால் அட்வன் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உருக்குலைந்த அவசரக்கால ஊா்தி’
Updated On :28 அக்டோபர் 2024, 9:26 pm

DIN

டேயிா் அல்-பாலா: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதியில் கடந்த 48 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 96 போ் உயிரிழந்தனா்.

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அந்தப் பகுதியில் திங்கள்கிழமை நிலவரப்படி இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 43,020 போ் உயிரிழந்துள்ளனா்; 1,01,110 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.

அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தத் தாக்குதலில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் ஏராளமான உடல்கள் புதையுண்டிருக்கலாம் எனவும், இதனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் பொதுமக்கள்.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் பொதுமக்கள்.

‘100 ஹமாஸ் படையினா் கைது’

ஜெருசலேம்: காஸாவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 100 ஹமாஸ் படையினரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

காஸாவின் பியிட் லாஹியா நகரிலுள்ள கமால் அட்வன் மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, 44 ஆண் மருத்துவப் பணியாளா்களைக் கைது செய்தது.

இந்த நிலையில், ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அந்த மருத்துவமனையிலிருந்து 100 ஹமாஸ் படையினரைக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.