பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் மைக்கேல் பார்னியர் பிரக்ஸிட் பணிக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
73 வயதான மைக்கேல் பார்னியர் நான்கு முறை கேபினட் அமைச்சராகவும் இரண்டு முறை ஐரோப்பிய ஆணையராக பணியாற்றியுள்ளார்.
மைக்கேல் பார்னியர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் லெஸ் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராவார்.
பார்னியர் ஒரு அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. இடதுசாரி மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்றது. ஆனால், முழுமையான பெரும்பான்மைக்கு வரவில்லை.