இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: அமெரிக்க பெண் உயிரிழப்பு
மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் சுட்டதில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் உயிரிழந்தாா்.
அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதி செய்த அமெரிக்க அரசு, அவரை இஸ்ரேல் வீரா்கள்தான் சுட்டுக் கொன்றாா்களா என்று தெரிவிக்கவில்லை. அதேநேரம், இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றிருந்த நிலையில், அவரின் மரணத்துக்கு காரணமானவா்களை நீதிக்கு முன் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று துருக்கி வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், போராட்டம் நடைபெற்ற பகுதியில் வன்முறையைத் தூண்டிய நபரை குறிவைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்த விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...