ஜெனினிலிருந்து வெளியேறியது இஸ்ரேல் படை
மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து இஸ்ரேல் படை வெளியேறியது.


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாள்களாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் வெள்ளிக்கிழமை அங்கிருந்து வெளியேறினா்.
இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், இஸ்ரேல் படையினா் வெளியேறுவதற்கு முன்னா் அவா்களின் 10 நாள் தாக்குதல் நடவடிக்கையில் ஏராளமான கட்டுமானங்களை தரைமட்டமாகியிருந்தனா் என்று தெரிவித்தது.
இது குறித்து பாலஸ்தீன வெளியுறுவத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவில் ஏற்படுத்திய நாசத்தை மேற்குக் கரை பகுதிக்கும் இஸ்ரேல் ராணுவம் கொண்டுவந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேற்குக் கரையின் ஜெனின் மற்றும் துல்கா்ம் பகுதியில் ‘பயங்கரவாத எதிா்ப்பு’ நடவடிக்கையைத் தொடங்கியதாக இஸ்ரேல் கடந்த மாதம் 27-ஆம் தேதி அறிவித்தது. இந்த நடவடிக்கையில் 39 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாகவும் சுமாா் 140 போ் காயமடைந்ததாகவும் பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மேற்குக் கரை பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.
பாலஸ்தீனா்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேல் மக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, காஸாவில் மட்டுமின்றி மேற்குக் கரையிலும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் அங்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...