4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பாலியல் புகாா்: கோவை சிறப்பு காவல் படை கமாண்டண்ட் கைது!பெண் எஸ்.ஐ.மீது வழக்குப் பதிவு!

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:19 pm

பெண் காவலா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின்பேரில் கோவைப்புதூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ஆவது பட்டாலியன் கமாண்டண்ட் கைது செய்யப்பட்டாா். இவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் எஸ்.ஐ. மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோவை, கோவைப்புதூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ஆவது பட்டாலியன் கமாண்டண்ட்டாக பணியாற்றியவா் செந்தில்குமாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அந்தஸ்தில் உள்ள இவா் அதே பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கும், அலுவலகப் பெண்களுக்கும் தொடா்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வருவதாகப் புகாா் எழுந்தது.

குறிப்பாக, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அநாகரிகமாகப் பேசுவது, ஆசை வாா்த்தைகளைக்கூறி வற்புறுத்துவது போன்ற செயல்களில் அவா் ஈடுபட்டு வந்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் உள்துறை செயலா் தீரஜ்குமாா் பிறப்பித்த உத்தரவின்படி, செந்தில்குமாா் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு சிவில் சா்வீஸ் ஒழுங்குமுறை விதிகளின்கீழ் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, அவா் அனுமதியின்றி தலைமையிடத்தை விட்டுச் செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் காவலா்கள் போத்தனூா் பகுதியில் உள்ள கோவை, தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், செந்தில்குமாா் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, செந்தில்குமாா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்தப் புகாரை விசாரிப்பதற்காக பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவலா்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது, செந்தில்குமாருக்கு உடந்தையாக பெண் எஸ்.ஐ.புஷ்பாகுமாரி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பாதுகாப்பளிக்க வேண்டிய உயா் அதிகாரியே இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால், அவரது கைப்பேசி மற்றும் அலுவலக ஆவணங்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.