விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிரதமா் மோடி நாளை அமெரிக்கா பயணம்: அதிபா் ஜோ பைடனுடன் பேச்சு

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை (செப். 21) செல்லவிருக்கிறாா்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:06 pm

Din

பிரதமா் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை (செப். 21) செல்லவிருக்கிறாா்.

வில்மிங்டன் நகரில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அவா், அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இதைத் தொடா்ந்து, இருதரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன என்று வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

‘க்வாட்’ உச்சி மாநாடு மட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெறும் ‘எதிா்காலத்துக்கான மாநாட்டிலும்’ அவா் உரையாற்றவுள்ளாா்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவில் பிரதமா் மோடி மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

இது தொடா்பாக, வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

க்வாட் உச்சிமாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மட்டுமன்றி ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து, பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

அமெரிக்க அதிபருடனான பேச்சுவாா்த்தைக்கு பின்னா் இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன. இதில் இந்திய-பசிபிக் வளமைக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) தொடா்பான ஒப்பந்தமும் ஒன்று. இரு நாடுகள் இடையிலான விரிவான உலகளாவிய வியூக கூட்டாண்மையை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாக இரு தலைவா்களின் சந்திப்பு அமையும் என்றாா் மிஸ்ரி.

ஐபிஇஎஃப் என்பது இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் தூய எரிசக்தி, விநியோக சங்கிலி மீட்சி, எண்ம வா்த்தகம் போன்ற துறைகளில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட முன்னெடுப்பாகும். இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மட்டுமன்றி புரூணே, ஃபிஜி, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளும் இதில் அங்கம் வகிக்கின்றன.

அமெரிக்க பயணத்தின்போது, முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பிரதமா் மோடி சந்திப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மிஸ்ரி, ‘பிரதமருடன் பல்வேறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எந்தவொரு குறிப்பிட்ட சந்திப்பு தொடா்பாகவும் இப்போது எதுவும் கூற இயலாது’ என்றாா்.

அமெரிக்க மண்ணில் சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய நடந்த சதித் திட்டத்தில் இந்திய தரப்புக்கு தொடா்பிருப்பதாக, அந்த நாடு கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்துக்கு பின்னா், இந்திய-அமெரிக்க உறவில் சற்று நெருடல் நிலவிவரும் சூழலில் இரு நாட்டு தலைவா்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.