ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்த தேவிஸ்ரீ பிரசாத், ஹனுமன்கைன்ட்!

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்கவாழ் இந்தியர்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

News image
பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த ஹனுமன்கைன்ட், தேவிஸ்ரீ பிரசாத்
Updated On :23 செப்டம்பர் 2024, 2:53 pm

DIN

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்கவாழ் இந்தியர்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நியூயார்க்கில் உள்ள லாங் ஐலேண்டில் நடந்த 'மோடி அண்ட் யுஎஸ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ராப் இசைக் கலைஞர் ஹனுமன்கைன்ட்டை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடியின் மூன்று நாள்கள் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, நாசாவ் கொலிசியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அந்த நிகழ்ச்சியில் ‘ஹனுமன்கைன்ட்’ என்றழைக்கப்படக் கூடியவரான சூரஜ் செருகட் என்ற ராப் இசைப் பாடகரையும் சந்தித்து உரையாடினார்.

கேரளத்தைப் பூர்விகமாகக் ஹனுமேன்கைன்ட் குரலில் ‘ஹனுமன்கைன்ட் - பிக் டாக்ஸ்’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் வைரலானது. யூடியூப்பில் மட்டும் 12 கோடிக்கும் அதிகமானப் பார்வைகளைப் பெற்றது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் இந்தப் பாடல் மிகவும் பிரபலம்.

பிரதமர் மோடி ஹனுமேன்கைன்டை கைகுலுக்கி மற்றும் கட்டிப்பிடித்து வரவேற்றார். மேலும், அவரை ஆரத்தழுவுவதற்கு முன்பு பிரதமர் மோடி ‘ஜெய் ஹனுமான்’ என்றும் முழக்கமிட்டார்.

பிக் டாக்ஸ், ரஷ் ஹவர், செங்கிஸ் மற்றும் கோ ட்டு ஸ்லீப் போன்ற பாடல்கள் மூலம் பெயர்பெற்ற ஹனுமன்கைன்ட், ஹிப்-ஹாப் இசையில் ஒரு முக்கியமான நபராக வேகமாக வளர்ந்து வருகிறார்.

இந்த நிகழ்வில் பாடகர் ஆதித்யா காத்வி மற்றும் தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கிய இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் உள்பட மற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய இசைக்கருவியான 'பறை'யையும் காட்சிப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.